திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.ராஜாராம் மற்றும் திரு.ரமேஷ்,அவர்கள் நெல்லை காவலன் 15, இருசக்கர ரோந்து வாகனத்தில் ரோந்து காவலராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் நேற்று இரவு களக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனம் மருத்துவமனை அருகே கீழே கிடந்த பையை எடுத்து பார்த்ததில் பணம்,வெள்ளி கொடி,மற்றும் மூன்று ATM கார்டு இருந்துள்ளது. இதனை 24.07.2021 நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி இன்று பையை தவறவிட்டதாக களக்காடு பகுதியை சேர்ந்த முகமது ஹீசைன் காவல் நிலையம் வந்து கூறினார்.மேற்படி காவல் ஆய்வாளர் திரு.ஜோசப் ஜெட்சன் அவர்கள்,விசாரணை மேற்கொண்டு 37ஆயிரம் பணம்,வெள்ளி கொடி மற்றும் ATM கார்டு ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தார்.
நெல்லை காவலன் ரோந்து பணி காவலர்களின் இந்நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.