வேலூர்: ஆரணி தாலுகா அல்லியேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்ன பையன் என்பவர் காலில் அடிபட்டு வேலூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார். ஆனால் ஊரடங்கு காரணமாக ஊருக்கு செல்ல முடியாமல், ரோட்டில் தவித்து வந்தார்.
இதனை கண்ட DCB காவல் நிலைய தலைமை காவலர் திரு.ஜெகதீசன், காவல் ஆய்வாளர் திரு. இலக்குவன் அவர்களிடம் தெரிவித்தவுடன், விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன், சக காவலர்களுடன் சேர்ந்து, பணத்தை ஏற்பாடு செய்து, ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சின்ன பையன் மற்றும் அவரது மனைவி சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பணியில் இருக்கும் நேரத்தில் மெத்தனமாக இல்லாமல் விசாரித்து ஊருக்கு அனுப்பி வைக்க, உதவி ஆக இருந்த உதவி ஆய்வாளர் சாந்த குமார், தலைமை காவலர்கள் ஜெகதீசன். சரவணன் O.P I/C ஆகியோர் பணிக்கு காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
அந்த பெரியவரும் அவர் மனைவியும் வணங்கி, காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.
காவலர்களை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி கொண்டிருக்கும் வேலையில், நற்செயல்கள் புரியும் இக்காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்.