சென்னை: சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர், பகிங்ஹாம் கால்வாயில், நேற்று மாலை, பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டது. அதை பார்த்த வாகன ஓட்டிகள், எண்ணுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, எண்ணுார் நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான வீரர்கள், பசுமாட்டை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
பகிங்ஹாம் கால்வாயில் இறங்கிய வீரர்கள், இரண்டு மணி நேரமாக போராடி, கிரேன் உதவியுடன் மாடு கயிற்றால் கட்டப்பட்டு, துாக்கப்பட்டது. பின், மாடு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.