சென்னை: தமிழகம் முழுவதும் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் 11 ஆயிரத்து 741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 26ஆம் தேதி முதல் உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள், ஆயுதப்படைகளில் காலியாக உள்ள 3,784 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், சிறப்பு காவல்படையில் 6,545, சிறைத்துறையில் 119, தீயணைப்புத்துறையில் 1,311 என மொத்தம் 11,741 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு .
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் அறிவிப்பு வெளியிடப்பட்டது இதையடுத்து இந்த பணிகளுக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்வில் மொத்தம் 5 லட்சம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் வெற்றி பெற்றனர் தற்பொழுது அவர்களுக்கான உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொற்று காரணமாக அனைத்தும் ரத்து செய்யபட்டது.
இந்நிலையில், அந்த தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அதன்படி 6 மாநகரக் காவல்துறை, 29 மாவட்டக் காவல்துறை, 5 சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மைதானங்களில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் இது மொத்தம் ஐந்து நாட்களுக்கு இந்த தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வினை எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பணிக்காக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் சீமா அகர்வால் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.” நுழைவு தேர்வு இந்த தேதியில் நடத்தப்படும்