தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைகுளம் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கடந்த (14.11.2022), அன்று காப்பர் வயர்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்த 2 காப்பர் ட்ரம்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து மேற்படி தனியார் காற்றாலை நிறுவன குடோனின் மேலாளரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (37), என்பவர் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நிறுவன குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த காளி பாண்டி மகன் மாரி செல்வம் (22), மற்றும் கோவில்பட்டி ஜமீன் கோட்டை தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேந்திரன் (48), ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி நிறுவனத்தின் குடோனில் காப்பர் வயர்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. மாரியம்மாள், மேற்படி குற்றவாளிகளான மாரி செல்வம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 280 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்கள் சுற்றப்பட்டு இருந்த 2 டிரம்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.