மதுரை : மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவர் அதே பகுதியில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் ,அவர் இன்று மாலை திண்டுக்கல் காலையில் தனது காரில் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் பழுதாகி நின்றது. தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். தொடர்ந்து நின்று கொண்டிருந்த கார் முன்பக்கம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் முன் பக்கம் தீயானது மலமளவனை எரியத் தொடங்கியது. தொடர்ந்து தல்லாகுளம் தீ யணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் காரில் எறிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த பேசறையில் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி