சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து அதன் பின்பு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி திரு. ஸ்டாலின், இனிப்பு வழங்கினார். தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்வரத்து விதிமுறைகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் குறித்து கூறினார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நாளை முதல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அவசிவம் ஹெல்மெட்கட்டாயம் அணிய வேண்டும், கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் இல்லையென்றால் புதிய போக்குவரத்து விதிமுறைகளின் படி அபராத தொகை கட்ட வேண்டும் ஹெல்மெட் போடவில்லை என்றால் ரூ 1000 அபதாரம் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மேலும் ரூ 1000 லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தால்ரூ 5 ஆயிரம் அபராதம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ 5000 அபதாரம் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ 1000 அபராதம், மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதம் கட்ட வேண்டும் காரைக்குடி சரகத்தில் இந்த நாளை முதல் அமலுக்கு வருகிறது எனவே அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி