சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மாதம் 22/10/2020 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சந்தையில் காய்கறிகள் வாங்கி வந்த இரண்டு பெண்களை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர் அந்த இரண்டு பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறித்து உள்ளான்.
அப்போது அறுந்த செயினை இரண்டு பெண்களும் பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என்று கத்தவும்இ மர்மநபர் ஓடி ஒளிந்து விட்டான். பின்னர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. Dr. அருண் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர் இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஊஊவுஏ யில் பதிவான, சுமார் 15 CCTVகாட்சிகளை பார்த்து குற்றவாளி அடையாளம் காணப்பட்டது. குற்றவாளி சேக்அப்துல்லா (25) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி