சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி வட்டத்தில் வருகின்ற (16.10.2024) அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி அரசாணை (நிலை) எண்:22 நாள்: (29.01.2024)-ன் படி மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலர்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, காரைக்குடி வட்டத்தில் வருகின்ற (16.10.2024) அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி