சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கழனிவாசல் வாரச்சந்தையில் தொடர் பைக் திருட்டு நடந்து வந்தது. இது குறித்து எழுந்த, தொடர் புகாரின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சி. ராஜகுமார், அவர்கள் முன்னிலையில் காரைக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய திரு. உதயகுமார் அவர்கள் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வி. இளையராஜா அவர்கள் தலைமையில் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சிறப்பு சார்பாய்வாளர் திரு.எம் ரமேஷ், அவர்கள் மற்றும் ஏனைய காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்டது. நெசவாளர் காலனி கந்தசாமி மகன் ரவிச்சந்திரன் (49), ஓ. சிறுவயல் ராஜீவ்காந்தி நகர் காந்திராஜா மகன் ராஜா (42) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு கியர் வண்டி ஓட்ட தெரியாததால், கியர் இல்லாத பைக்குகளை திருடியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி