சிவகங்கை: காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம், காரைக்குடி சமூக ஆர்வலர்கள் மற்றும் கானல் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களுக்கான மிகப்பெரிய அளவிலான இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பல்வேறு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்த பெண்களுக்கு “வீரமங்கை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் மருத்துவர் குமரேஷன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ரோட்டரி சங்க தலைவர் லோகநாதன் மற்றும் கானல் கண் மருத்துவமனை மேலாளர் சிறப்புரையாற்றினர். மேலும் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், தொழில் அதிபர் கோடீஸ்வரி, குளோபல் மருத்துவமனை இயக்குனர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி நகரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர். நிகழ்ச்சியை ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















