சிவகங்கை: காரைக்குடி வட்டம், கோட்டையூர் கிராமம், டெலிபோன் காலனி என்ற பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை குடிமைப்பொருள் பறக்கும் படை தாசில்தார் தமிழரசனுக்கு தகவல் வரப்பெற்றது. அதன்பேரில் தாசில்தார் தமிழரசன், துணை தாசில்தார் சேகர் ஆகியோர் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது டெலிபோன் காலனியில், ஒரு காலி பிளாட்டில் கடத்தலுக்கு என்றே தகர செட் அமைக்கப்பட்டு, அதனுள் அரிசிமூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. செட்டை திறந்து பார்த்த பொழுது சுமார் 38 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1765 கிலோ அளவுள்ள ரேஷன் புழுங்கல் அரிசி இருப்பதை கண்டறிந்து அதனை கைப்பற்றினர். கைப்பற்றுகையின் போது கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் திரு. செல்வன் அவர்கள் உடன் இருந்தார்.
கைப்பற்றப்பட்ட மூடைகள் காரைக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. அரிசியை பதுக்கி வைத்திருந்த நபர் கோட்டையூர் பேரூராட்சி, குருநாதன் கோவில் தெருவில் உள்ள, சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண் எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவான அவர் நபர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி