தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்கு மாங்குடி பகுதியில் சுலைமான் பாட்ஷா என்பவர் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைலோ கார், முன் பகைக் காரணமாக சில மர்ம நபர்களால் நேற்று (19 -7-2023 ) அதிகாலை சுமார் 1-40 மணியளவில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பாபநாசம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்கள், சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவரது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் தலைமை காவலர் பிரபு மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகர், மற்றும் சந்தோஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் தடங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி காருக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பாபநாசம் வட்டம், செருமாக்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் கௌதமன் (20), அதே பகுதியை சேர்ந்தவர்களான பழனிசாமி மகன் அருண்குமார் (23), மற்றும் கலையரசன் மகன் நவீன் (25), ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று (20-7-2023) போலீசார் அம்மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்