சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில்,
இதன் தொடர்ச்சியாக, M-1 மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 18.06.2021 அன்று இரவு, மாதவரம் ரவுண்டனா அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து சட்டவிரோதமாக கடத்தி வந்த 1. பிரகாஷ், (வ/22), மாதவரம், 2.விகாஷ், (வ/26), திருநின்றவூர், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.