மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா, அவர்களின் உத்தரவுப்படி சட்டவிரோதமான செயலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதன்படி சட்ட விரோதமாக பாண்டி சாராயம் காரில் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினருக்கு மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா, அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.