தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை காரில் கடத்திய 2 பேர் கைது – 3 கிலோ 650 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ரொக்கப்பணம் ரூபாய் 30,000/- மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாப பிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு மற்றும் தனிப்படை போலீசார் நேற்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தூத்துக்குடி ஆவுடையார்குளம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் சந்தனராஜ் 22. மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் சங்கரநாராயணன் 25. ஆகிய 2 பேரும் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தியது தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளி சந்தனராஜ் மற்றும் சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ 650 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ரொக்கப்பணம் ரூபாய் 30,000/- மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி சந்தனராஜ் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.