கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் தினேஷ் என்பவர் ஓசூரில் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் 08.12.2022 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு ஓசூர் To கிருஷ்ணகிரி NH சர்வீஸ் ரோட்டில் உஜ்ஜீவன் வங்கி எதிரே கடைக்குச் செல்ல வேண்டி தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கம்பெனியின் இரண்டு லேப்டாப்பை காரின் முன் சீட்டில் வைத்துவிட்டு சென்றதாகவும் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 9.45 மணிக்கு காருக்கு வந்தபோது தன் காரின் கதவு திறந்திருந்ததாகவும் காரின் உள்ளே வைத்திருந்த கம்பெனியின் இரண்டு லேப்டாப்புகள் திருடு போய்விட்டதாக ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜர் ஆகி தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் லேப்டாப் திருடிச் சென்ற இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப்புக்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.