திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்இ மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் ஆய்வு நடத்தினார்.
அப்போது வாடிக்கையாளர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்;-
மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 1,900 பேர் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்ட 1,700 கடைகளை மூடி சீல் வைத்துள்ளோம். 1500 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்