திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே காயம்பட்டு மயங்கி நிலையில் மயில் கீழே கிடந்தது.
இதனை வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள்,உதவி ஆய்வாளர் திரு. அருண்ராஜா, மற்றும் தலைமை காவலர் திரு.சிங்காரவேலன் ஆகியோர் மயிலை தூக்கிக்கொண்டு வந்து வள்ளியூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து அதற்கு முதலுதவி செய்தனர்.
பின்னர் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மயிலை காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இச்செயலினை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.