கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி சந்திரன் ஏரிப்பகுதியில் வனச்சரக அலுவலர் திரு.சுகுமார், தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது காப்புக்காடு பகுதியிலிருந்து நான்கு பேர் மூட்டைகளுடன் வெளிவந்தனர். வனசரகர்களை பார்த்தவுடன் அவர்கள் தப்பியோட முயன்ற அவர்களைப் பிடித்து சோதனை செய்ததில் மூட்டையில் 16 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ங்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் ராயக்கோட்டை போடம் பட்டி கிராமத்தை சேர்ந்த குப்பு ராஜி, சந்திரன், மாது, சாரண்டப்பிள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜி என்பது தெரியவந்தது. நான்கு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்