திருச்சி: திருச்சி மாவட்டம், 09.02.2021 நேற்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் IPS அவர்களின் உத்தரவின் படி, திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திரு. சிவராஜ் அவர்களின் தலைமையில் மாத்தூர் அரசு அன்னை சத்யா நினைவு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 38 பெண் குழந்தைகளின் நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும், மேலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினர்.
மேலும் பெண் குழந்தைகளிடம், தங்களுக்கு தேவையான பொருட்கள் அல்லது நிறைகுறைகளை தெரிவிக்க எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று பெண் குழந்தைகளிடம் கைபேசி எண்ணை கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்