ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் LPP வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவாசாயிகள் கோஷங்களைஎழுப்பி நடைபயணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு (14.12.2023) காலை 11 மணியளவில் நடைபயணம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மேலும் விவாசாயிகள் அரசுக்கு கான்கிரிட் திட்டத்தால் விவசாயம் பாதிக்கபடும் ஈரோடு கரூர் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கடுமையாக பாதிக்கபடும் என்றும் கான்கிரிட் திட்டத்தால் இந்த மூன்று மாவட்டங்களும் பாலைவனம் ஆகும். எனவே கான்கிரிட் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நடை பயணத்தின் போது விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்காண விவசாயிகள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட டவுன் போலிஸ் சூப்பிரண்டு தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்