காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு. பிரதீப் பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (சென்னை) டிஜிபியாக நியமனம்
2. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ஜெயந்த் முரளி, ஆயுதப்படை (சென்னை) ஏடிஜிபியாக நியமனம்
3. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
4. மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த திரு.ஆபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஏடிஜிபியாக நியமனம்
5. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ஹெச்.எம்.ஜெயராமன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (சென்னை) ஐஜியாக நியமனம்
6. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.தினகரன், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம்
7. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.லோகநாதன், ஆயுதப்படை ஐஜியாக (சென்னை) நியமனம்
8. உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜியாக இருந்த திரு.எஸ்.ராஜேந்திரன், காவல் துறை தொழில்நுட்ப பிரிவின் (சென்னை) டிஐஜியாக நியமனம்
9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.மூர்த்தி, சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையராக நியமனம்
10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.எஸ்.செந்தில், காவலர் பயிற்சி பள்ளி, பேரூரணி, தூத்துக்குடி எஸ்பியாக நியமனம்
11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், மதுரை மண்டல (அமலாக்கம்) எஸ்பியாக நியமனம்
12. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.அருளரசு, சட்டம் – ஒழுங்கு (சென்னை) ஏஐஜியாக நியமனம்
13. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.சரவணன், நிர்வாகப்பிரிவு ஏஐஜியாக (சென்னை) நியமனம்
14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ராஜா, வணிக குற்றப்பிரிவு (சென்னை) எஸ்பியாக நியமனம்
15. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.சுரேஷ் குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு எஸ்பி-2 ஆக நியமனம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.