தூத்துக்குடி : எட்டையாபுரம் வீரப்பட்டி சேவியர் காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜ் (28), என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரின் மகளான ரேஷ்மா (20, என்பவரை கடந்த (29.06.2022), அன்று காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (25.07.2022) மேற்படி மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூததுக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்து விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், அவர்கள் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜின்னா பீர்முகம்மது, விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளவரசு, ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜபிரபு, திரு.முத்துவிஜயன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.நாராயணசாமி, மற்றும் தனிப்படைகாவல் துறையினர், ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கொலையுண்ட ரேஷ்மா என்பவரது தந்தை எட்டையாபுரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்த சாமிதாஸ் மகன் முத்துகுட்டி (43), மற்றும் ரேஷ்மாவின் தாயார் முத்துலெட்சுமி (40), ஆகிய இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மாணிக்கராஜ் ஆகிய இருவருரையும் அரிவாளால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. உடனே தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகள் முத்துக்குட்டி மற்றும் முத்துலெட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.