தர்மபுரி : தர்மபுரி மாவட்ட பெங்களூர் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட பி.காம் பட்டதாரி, வாலிபர் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கி உள்ளார். அந்த மனுவில் தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (22) ஆகும். பிகாம் படிக்கும் போதே மணிகண்டனுக்கும், பெங்களூரைச் சேர்ந்த திவ்யா(23) ஆகிய இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியது. இருவேறு சமூகம் என்பதால், எங்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இரு வீட்டாருக்கும் தெரியாமல் 19-ம் தேதி கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் பெண் வீட்டார் தரப்புக்கு தெரிந்ததால், அவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஆகையால் எங்கள் இருவருக்கும் தருமபுரி எஸ்பி உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட பெங்களூரைச் சேர்ந்த பெண்ணுடன் பட்டதாரி, வாலிபர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.