திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக அளித்த புகாரின் பெயரில், 2.11.2020 அன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொ) திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின்படி, திருவெறும்பூர் காவல் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு.ஞானவேலன் அவர்களின் தலைமையில், திருவெறும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் ஹரிஹரன், விஜயகுமார் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சிசிடிவி பதிவுகளை வைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
23.11.2020 நேற்று சிசிடிவி பதிவுகள் வைத்துக்கொண்டு சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கூத்தைப்பார், செட்டியார் பேட்டை, பத்தாளப்பேட்டை, கடம்பங்குடி, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், ஆடுதுறை வழியாக நன்னிலம் சென்று விசாரணை மேற்கொண்டு 25 லட்சம் மதிப்பில் ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர் களையும் கைது செய்துள்ளனர்.
காவலர்கள் இவ்வாறான துரிதமான முறையில் கண்டுபிடிக்கும் திறனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டுகின்றனர்.