திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணராஜன் என்பவர் பாலாஜி ரவுண்டானா அருகே நள்ளிரவில் அவரது விலை உயர்ந்த செல்போனை தவற விட்டுள்ளார். இதுகுறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பொன்னுச்சாமி காவல் நிலைய ரோந்து தலைமை காவலர் திரு.கல்யாண் குமார் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.பிரேம்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு செல்போனை திருடிய நபர்களை பிடித்து செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் ரூ.60,000 மதிப்புள்ள செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் சிறப்பாக செயல்பட்டு செல்போனை மீட்டு கொடுத்த பழனி அடிவாரம் காவல்துறையினரை பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா