திருநெல்வேலி : திருநெல்வேலி, ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சுபாராணி(24) என்கின்ற பெண் (17.01.2020) அன்று காணாமல் போனதாக அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் திருமதி. ஜெகதா அவர்கள் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.வினுக்குமார் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு.ஸ்ரீபால் அவர்கள் அப்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது தோழியின் உதவியால் பணிபுரிந்து வந்த சுபாராணியை மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் சுபாராணியின் கணவரை அழைத்து ஆய்வாளர் அவர்கள், இனிமேல் இதுபோல் பிரச்சனை நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி