திருவள்ளூர்: திருவள்ளூர் மாத்தூர் எம் எம் டி ஏ பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் 38 லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார் கடந்த 7ஆம் தேதி லாரி டிரைவர் ஜெயபால் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஜே எஸ் டபிள்யூ நிலக்கரி கிடங்கில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றி சென்று இறக்கி விட்டு. கம்பெனி அருகில் நிறுத்தி வைத்திருந்த டிப்பர் லாரியை அடுத்த நாள் நிலக்கரி ஏற்றுவதற்காக சென்று பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் லாரி இல்லாததால் சுற்று வட்டாரங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனி மற்றும் போலீசார் நிலக்கரி கிடங்கின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். நிறுத்திய இடத்தில் காணாமல் போன டிப்பர் லாரியால் சக லாரி உரிமையாளர்ள் கலக்கம் அடைந்துள்ளனர்.