திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பெரில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் மேற்கு திரு.K.சுரேஷ்குமார அவர்கள் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகவடிவு அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.நடராஜன் அவர்கள், திருமதி.வித்யாலட்சுமி அவர்கள், திருமதி கலைசந்தான மாரி அவர்கள், காவல் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் காவல் ஆளினர்கள் திருநெல்வேலி மாநகரத்தில் கைப்பேசி காணாமல் போனதாக பெறபட்ட புகார்களில் ரூ.20,12,200/- மதிப்புள்ள 104 கைபேசிகள் கைப்பற்றப்பட்டு 08-06-2022 தேதி இன்று திருநெல்வேலி மாநகர ஆணையாளர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
உடன் நுண்ணறிவு காவல் ஆய்வாளர் திரு.பிறைச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இணையதள மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும் மற்றும் KYC Update செய்ய குறுஞ்செய்தி மூலம் OTP ஐ பெற்றுக் கொண்டு பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் என்று குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தை இழந்த திரு.ராஜராஜன் என்பவருக்கு ரூ1,59,800/- , திரு சரவணன் என்பவருக்கு ரூ 71,852/-, திருமதி.ஜனதுள் ஆதுல்யா என்பவருக்கு ரூ 41,900/-, திரு ரவி சங்கர் என்பவருக்கு ரூ 34,466/- திருமதி.உமயீறு பேகம் என்பவருக்கு ரூ 28,999/-, திருமதி.பேச்சியம்மாள் என்பவருக்கு ரூ 25,000/- என மொத்தம் ரூ 3,62,017/- வங்கி மூலமாக திரும்பப் பெறப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இணையதளம் வழியாக பண மோசடி செய்யப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு 12 நபர்களுக்குரிய மோசடி செய்யப்பட்ட தொகை ரூ 15,83,154/-ஐ மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கை முடக்கி வைக்கப்பட்டு உரியவர்களுக்கு திரும்பிப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அறிமுகம் இல்லாத நபர்கள் உங்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விபரம் ATM கார்டு விபரங்கள் மற்றும் OTP ஏதேனும் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும். SMS லிங்க் மூலமாக பரிசு விழுந்ததாகவோ அல்லது KYC Update செய்ய சொல்லி Message வந்தாலோ லிங்க் ஐ தொடாமல் புறக்கணிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அறிமுகமில்லா நபர்களிடமிருந்து Video Call வந்தால் அதை புறக்கணிக்க வேண்டும் எனவும்,பயன்படுத்திய செல்போன்களை (Second Hand) அசல் பில் இல்லாமல் பொதுமக்கள் வாங்க வேண்டாம் எனவும் காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாக புகார்களை பதிவு செய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெறுவதற்கான சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் தெரிவித்தார்கள்.