சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த (20/5/2023),ஆம் தேதி மாலை 3 மணி அளவில் இக்கோவிலின் பூசாரி குமரவேல் என்பவர் பூஜை செய்து கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டதாகவும் மீண்டும் (21/5/2023) காலை 6:30 மணி அளவில் பூஜை செய்ய வந்து பார்த்தபோது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் மடத்திலிருந்த உலோகத்தால் செய்யப்பட்ட பெருமாள் சிலை -1 , பூ தேவி சிலைகள் – 2, ஆஞ்சநேயர் சிலை – 1மற்றும் குழந்தை கிருஷ்ணர் சிலை – 1 என மொத்தம் ஏழு சிலைகள் காணவில்லை என தெரிய வந்ததால் இக்கோவிலின் தர்மகத்தா தாரமங்கலத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் இனியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்களின் உத்தரவின் படி இரண்டு தனிப்படைகள் அமைத்து CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பெரிய சோரகை குள்ளநூரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சக்திவேல் என்பவர் திருடி சென்றதாக தெரிய வந்ததால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து களவு போன பொருட்கள் குற்றவாளி இடமிருந்து கண்டுபிடித்த தனிப்படை காவலர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்