சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் வயது17 மதுரை மாநகரில் உள்ள பிரபல பள்ளியான செயிண்ட் மேரிஸ் பள்ளியில் படித்து வந்தான்.தந்தை இல்லாத நிலையில் தாயுடன் திருப்புவனத்தில் வசித்து வந்துள்ளான்.
இந்நிலையில் 03/12/2018 அன்று காலை பள்ளிக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை.வீடு திரும்பாத சிறுவன் குறித்து தாய் தமிழ்செல்வி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதற்கிடையில் 05/12/2018 சிறுவன் வைத்திருந்த கைபேசி மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதற்கு பிறகு கைபேசி விற்க பட்டதோ? அல்லது தொலைந்து போனதா? விபரம் தெரியாத நிலையில் இரண்டு வருடமாக எந்த ஒரு தகவலும் இல்லை.
காவல்துறையினர் இரண்டு வருடமாக சிறுவனை குறித்து தேடிவருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேடியும் எந்தவித தகவலும் இல்லாத காரணத்தினால் காவல்துறையினர் புதுவித முயற்சி மூலம் சமூகத்தின் வாயிலாகவும், ஊடகங்கள் மூலம் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் திருப்புவனம் காவல்துறையினர் சிறுவனை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தொடர்பு கொள்ள சிறுவனை பற்றி புகைப்படம் தாயின் கைபேசி எண், காவல் துறையினர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல் கொடுத்து பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கணவரை இழந்த நிலையில் தற்போது இரண்டு வருடமாக மகனையும் பிரிந்து வாடும் தாயின் கண்ணீரை துடைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உதவிடுமாறு தமிழக காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை