கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 10.03.2020 , மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் போடபட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனத்திற்கு வந்த ஒருவரின் குழந்தை கோவிலில் காணாமல் போய்விட்டது. செய்வது அறியாது திகைத்த பெற்றோர் மண்டைக்காடு கோவிலில் அமைக்க பெற்றுள்ள OUT POST ல் புகார் தெரிவித்தனர். இத்தகவல் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் சாஸ்திரி IPS அவர்களிடம் தெரிவிக்கபட்டது. அவர் உடனடியாக குழந்தையை மீட்க கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்களும் துரிதமான தேடுதலில் ஈடுபட உத்தரவிட்டார்.
அப்போது கடற்கரை பகுதியில் ஒரு குழந்தை தனியாக நடந்து வந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த நாகர்கோவில் ஆயுதப்படை காவலர் திரு.பெறின் ஸ்மித் மற்றும் அருமனை காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திரு.வின்சென்ட் ஆகியோர் குழந்தையை மீட்டு மண்டைக்காடு O.P க்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தையை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும், பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.