இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பள்ளிக்கு சென்று விட்டு டியுஷன் செல்வதாக கூறி சென்ற 2 குழந்தைகள் காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பரமக்குடி நகர் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு இரு குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளை விரைவாக மீட்டு ஒப்படைத்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.















