இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை. அவர்கள் முன்னிலையில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் பரக்கத் மஹாலில் நடைபெற்றது. மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 31 நபர்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு 24 புகார்தாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.அருண் (தலைமையிடம்) அவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய தற்போதைய தகவல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தொடர்பாக உட்கோட்டம் வாரியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தொழில்நுட்ப உதவியுடன் இவ்வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்க அறிவுறுத்தினார்கள். இந்த சிறப்பு முகாம் மூலம் திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை, அவர்கள் தெரிவித்தார்கள்.