மதுரை: மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று நேற்று முன்தினம் (19.12.19) செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் அவர்கள் பெற்றவர்கள் கொடுத்த புகாரின் பேரில் Girl Missing வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி காணாமல் போன மூன்று சிறுமிகளையும் விரைவில் கண்டுபிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவிட்டார்கள். அதன் பேரில், காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.கார்த்திக்,IPS., அவர்களின் வழிநடத்துதலின் படி தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.காட்வின் ஜெகதீஸ் குமார் அவர்களது மேற்பார்வையில் D2-செல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.கோட்டைச்சாமி தலைமையில், உதவி-ஆய்வாளர் திரு.தியாகப்பிரியன் மற்றும் தலைமைக்காவலர்கள் ஆகியோர் சகிதம் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமிகளை தேடி வந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள அக்சயா அம்மாவை பார்க்க அவரது தோழிகள் சத்தியா, சபினாவை அழைத்துக்கொண்டு அக்ஷயா வீட்டிலிருந்து ரூபாய்.1,21,000/- எடுத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு பஸ் ஏறிச் சென்றது தெரியவந்ததை அடுத்து தனிப் படையினர் நாகப்பட்டினம் விரைந்து சென்று நாகப்பட்டினம் காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் வைத்து மூன்று சிறுமிகளையும் மீட்டனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் வீட்டிலிருந்து எடுத்து சென்ற ரூபாய்.1,21,000/- பணத்தில் செலவு போக மீதம் ரூபாய்.1,19,000/- கைப்பற்றிய பணம் மற்றும் சிறுமிகளுடன் பாதுகாப்பாக மதுரை அழைத்து வரப்பட்டு இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை