பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..ச.மணி, அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள
திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள காணாமல் போனவர்களின் வழக்குகளையும், பின்னர் மற்ற மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள காணாமல்போனவர்களின் வழக்குகளின் விபரத்தினையும் ஒன்றிணைத்து காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க அவர்களின் குடும்பத்தினரால் அடையாளம் காணும் வகையில் சிறப்பு விசாரணை முகாம் நடைப்பெற்றது.
இந்த விசாரணை முகாமினை பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் (தலைமையிடம்) மற்றும் திருமதி.வாணி, காவல் ஆய்வாளர், குற்ற பதிவேடுகள் கூடம் மற்றும் அவரது குழுவினர்கள் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.