கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா, காவல் உதவி ஆய்வாளர் திரு.முத்து, தலைமை காவலர் திரு.கணேஷ், திரு.அந்தோணி, திரு.திலகர் மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் கொரானா வைரஸ் நோய் தொடர்பாக பாதுகாப்பாக, இருப்பது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினிகள் மற்றும் முகத்துக்கு அணிவதற்காக மாஸ்க் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்