கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலையத்தில் காந்திபுரம் முதல் தெருவில் தங்கியுள்ள, வெளிமாநில தொழிலாளர்களுக்கு, போதிய வேலைக்கு செல்ல முடியாத, காரணத்தினால், அன்றாட உணவு வேண்டி இருப்பது, தெரிந்தது மேற்படி தொழிலாளர்களுக்கு, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களுக்கான, தேவையான 50 கிலோ கோதுமை மாவு, 10 கிலோ துவரம் பருப்பு, 50 கிலோ உருளை கிழக்கு, 20 கிலோ வெங்காயம் மற்றும் காய்கறிகள் ஆகியவை கொடுக்கப்பட்டது.
மேலும் கொரானா வைரஸ் நோய் தொடர்பாக பாதுகாப்பாக, இருப்பது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினிகள் மற்றும் முகத்துக்கு அணிவதற்காக மாஸ்க் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்