கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பிரதீப் குமார் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.லதா காவல் உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன் குமார், வள்ளி ராஜ் மற்றும் தலைமை காவலர்கள் மணிகண்டன், சந்திரசேகர், திலகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட 7.25 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஜெகநாதன் என்பவரை கைது செய்து.
அவரிடமிருந்து 67,000 பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 4190/- பணத்துடன் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ராகேஷ் குமார் என்பவரிடமிருந்து கைப்பற்றினர். மேற்குறிப்பிட்ட இரண்டு நபர்களையும் கைது செய்த காட்டூர் காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
