திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர் (பொறுப்பு திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அவர்களின் தலைமையில் நடத்திய தேடுதல் வேட்டையில் தட்டரனை காட்டுப்பகுதியில் சுமார் 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
                                











			
		    



