காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டன் பெட்டிங், இலாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம, கோட்ராம்பாளையம் விநாயகர் கோயில் அருகே மற்றும் அஷடபுஜபெருமாள் கோயில் அருகேயும் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங் சூதில் ஈடுபட்டு கொண்டிருந்த சம்பத் த/பெ மாரி மற்றும் ஆனந்தன் ஆகியோரை விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்தார்.
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங், இலாட்டரி, சூதாட்டம் மற்றும் கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்தார்.