வேலூர் : வேலூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (14.12.2022),-ம் தேதி
விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டம் விளையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முரளிதரன், அவர்கள் தலைமையிலான போலீசார் ஜாப்ரா பேட்டை கன்னி கோவில் அருகே சோதனை செய்ததில் குற்றவாளிகள் 1) வெங்கடேசன் (52) பாரதியார் தெரு பிச்சனூர் பேட்டை குடியாத்தம் மற்றும் 2) சரவணன் (32) ஆயக்காரர் தெரு காமாட்சி அம்மன் பேட்டை குடியாத்தம். என்பவரிடம் இருந்து காட்டன் சூடாகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்