ஓமைக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும்பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று ( 23.01.2022 ) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 1100 பேர் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம்வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கும், அது சார்ந்த பணியாளர்களையும் அனுமதியளித்து முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.
மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வீதிகளில் சுற்றிய சுமார் 990 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு உணர்வுடன் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து காவல்துறையினரையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்