குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா ( 28 ) என்பவர் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 26.10.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி கைது
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழ்ச்செல்வன் ( எ ) சின்னா ( 20 ) என்பவர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவரை மணிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான குழு மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்