காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தலைமையில் நெகிழி இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து பின்வருமாறு ஏற்றுக் கொண்டனர், நெகிழி இல்லா தமிழகம் – உறுதிமொழி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதை நான் நன்கு அறிவேன். எனவே ஒருமுறை பயன்படுத்தும் கீழ்கண்ட ( பிளாஸ்டிக் ) நெகிழி பொருட்களான
- உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை
- பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்
- தெர்மாகோல் தட்டுகள் / குவளைகள்
- பிளாஸ்டிக் குவளைகள்
- பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
- பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்
- நீர் நிரப்ப பயன்படும் பைகள் / பொட்டலங்கள்
- பிளாஸ்டிக் பைகள்
- பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
- பிளாஸ்டிக் தூக்கு பைகள்
- பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
- உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் / பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள்
- பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் நெய்யாத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி ஏற்கின்றேன்.
- சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களான
- வாழையிலை பாக்குமர இலை
- காகித சுருள்
- கண்ணாடி / உலோகத்தால் ஆன குவளைகள்
- காகித உறிஞ்சு குழாய்கள்
- காகித / துணி கொடிகள்
- உணவு தேக்கரண்டிகள்
- அலுமினியத்தாள்
- தாமரை இலை
- மூங்கில் / மரம் / மண் பொருட்கள்
- துணி / காகிதம் / சணல் பைகள்
- பீங்கான் பாத்திரங்கள்
மண்குவளைகளை பயன்படுத்துவேன் எனவும் உறுதிமொழி ஏற்பதுதோடு மற்றவர்களையும் அதை பயன்படுத்த ஊக்கப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்