காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் 19. 11. 2019 ஆம் தேதி மாலை, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. S. பிரபாகர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையர் இயக்குனர் திரு. ஷகில் அக்தர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் திரு. கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜூலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திரு. S. பிரபாகர், காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வம் மற்றும் காவலர்கள் திரு.லிங்கநாதன் ராஜராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் கண்காணித்துக் கொண்டிருந்த போது, ஆயுளுவ டேவிட் அதேபாகின் (20), ஒழுகு ஒலிஸயமே எம்ம்யாந்யூவல் (19) ஆகிய இரண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள், தற்சமயம் எஸ்ஆர்எம் கல்லூரியில் பயிலும் இவர்கள், சக மாணவர்களுக்கு, கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வது தெரியவந்தது. பண பரிவர்த்தனை எல்லாம் ஆன்லைன் மூலம் நடைபெறுவதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் ஆய்வாளர் திரு. பிரபாகர், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை சோதனை செய்தபோது இருவரிடம் இருந்து தலா 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். சில மாணவர்களுக்கு வாங்க காலி பிளாஸ்டிக் பைகள், எடை போடும் சிறிய தராசும் கைப்பற்றப்பட்டது.
காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு சமீபகாலமாக இதுவரை, ஆறு கல்லூரி மாணவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிடைம நிருபர்
S. சண்முக சுந்தரம்