காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக நகரம் மற்றும் கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தும் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடமிருந்த அச்சத்தையும், அய்யப்பாட்டையும் கலைத்து பொதுமக்களை சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செவிலிமேடு ஆரம்ப சுகாதார நிலையம், சின்னகாஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், PTVS மேல்நிலைப்பள்ளி, ஆர்காடு நாராயணசாமி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜவகர்லால் நேரு மார்க்கெட், மீன் மார்க்கெட், ஜவகர்லால் தெரு மற்றும் ஓரிக்கை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் எடுத்துக்கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்