திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம் உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, காவல்துறை மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம், காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜே. குமரேசன் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இதில் காங்கேயம் வட்ட ஆய்வாளர் திரு. எஸ். ரவிக்குமார், ஊதியூர் பெண் உதவி ஆய்வாளர் திருமதி. கோமதி, காங்கேயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குமார் ஆகியோர் மற்றும் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வங்கிகளின் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் 26. 2. 2020 ஆம் தேதி மாலை காங்கேயம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வங்கி ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டது.
-
அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் உன் கண்டிப்பாக சிசிடிவி பொருத்தவேண்டும்.
-
சிசிடிவியில் டிஆர் மறைமுகமான இடத்தில் வைக்க வேண்டும் சிசிடிவி பதிவுகளை வங்கி மேலாளர் வங்கி உதவி மேலாளர் ஆகியவர்களின் மொபைல் போனில் பார்க்கும் வசதி கொண்டிருக்கவேண்டும்.
-
சிசிடிவி பழுது ஏற்பட்டாலோ சரிவர இயங்கவில்லை என்றாலோ உடனே அதனை சரிசெய்ய வேண்டும்.
-
சிசிடிவி பதிவுகள் பதிவாகின்றன என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.
-
அனைத்து வங்கிகளிலும் அலாரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். செயலிழந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்.
-
மேலாளர், உதவி மேலாளர் மற்றும் காவல் துறைக்கு குறுஞ்செய்தி அபாய காலங்களில் அனுப்பும் வசதி பெற்றிருக்க வேண்டும்.
-
அனைத்து வங்கிகளிலும் திடகாத்திரமான காவலர்களை 24 மணிநேரம் இருக்குமாறு நியமிக்க வேண்டும்.
-
இரவு நியமிக்கும் காவலர்கள் எக்காரணம் கொண்டும் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். அவர்களின் பணியை கண்காணிக்க அடிக்கடி சோதனையிட வேண்டும்.
-
பணியில் மெத்தனம் காட்டும் வங்கி காவலர்களின் மேல் நடவடிக்கை எடுத்து, வேறு காவலர்களை நியமிக்க வேண்டும்.
-
பகலில் இருப்பவர்கள் வங்கிக்கு வரும் வாகனங்களை வரிசையாக நிறுத்தவும், வாகனங்களில் பதிவு எண்களை பதிவேட்டில், எழுதி பராமரிக்கவேண்டும்.
-
காவலாளி இரவுப் பணியின்போது அவ்வப்போது வங்கியின் சுற்றுப்புறங்களில் குறிப்பாக வங்கியின் பின்புறம் ஆகியவற்றை கண்காணித்து சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், ஆள் நடமாட்டமோ இருந்தால், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
-
வரும் வாடிக்கையாளர்களில் யாரும் சந்தேகப்பட கூடியவர்கள் வந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
-
வாடிக்கையாளர் அல்லாத நபர்கள் யாரேனும் வந்திருந்தால், அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவேட்டில் பராமரிக்கவேண்டும்.
-
வங்கி மேலாளர்கள் தங்களது வங்கியிலிருந்து பணம் எடுத்து செல்பவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
-
வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-
வங்கியின் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யாமல் வங்கிக்கு வருபவர்களை கண்காணித்துக் கொண்டு இருப்பவர்களை சரியாக அடையாளம் கண்டு, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா