திருப்பூர்: தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இத்தகவல் அறிந்த திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மித்தல், IPS அவர்கள் ஆம்புலன்ஸில் அவர் வருவதற்குள், தனிப்பிரிவின் மூலம் டாக்டர்கள், காவல்துறையினரை அலார்ட் செய்து, சிகிச்சை மேற்கொள்ள அவரும் ஸ்பார்ட்டிற்கு வந்துவிட்டார்.
டாக்டர்கள் இரண்டு மணி நேரம் போராடியும் அவரை காப்பாற்ற இயலவில்லை. அவரின் இறுதி சடங்கு நாளை தி கோடு அருகில் உள்ள காந்தி ஆசிரமத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மறைந்த செல்வம் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.